பொள்ளாச்சியில் மக்னா யானையை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

பொள்ளாச்சியில் மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானையை விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து சேதமாக்கி வருவதால், உயிர்சேதம் ஏற்படுவதற்குள் யானையை பிடிக்க வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



கோவை: மக்னா யானையை பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் மயக்கூசி செலுத்தி பிடிபட்ட மக்னா யானையை பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதியான டாப்சிலிப் பகுதியில் விடப்பட்டது.

இந்த யானை கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி அன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து கோவையை நோக்கிச் சென்றது மீண்டும் மயக்கூசி செலுத்தி பிடிக்கப்பட்ட நிலையில் யானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை அடுத்துள்ள மந்திரி மட்டம் பகுதியில் விடப்பட்டு கண்காணித்து வந்தனர்..

ஆனால் தற்போது ரேடியோ காலர் கருவி பழுதாகி செயலிழந்து உள்ளதால் யானை நகர்ந்து செல்லும் இடத்தை கண்காணிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வந்தனர்.



இந்நிலையில் மக்னாயானை மீண்டும் இரண்டாவது முறையாக வனப்பகுதியை விட்டு வெளியேறி பொள்ளாச்சி சரளப்பதி பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து சுற்றித் திரிகிறது.



விவசாய நிலத்திற்குள் புகுந்த யானை குடியிருப்புக்குள் வராமல் இருக்க டாப்சிலிப் பகுதியிலிருந்து மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானையை கண்காணித்து வருகின்றனர்.



ஆனால் இந்த யானை வனப்பதிக்குள் செல்லாமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய தோட்டத்திற்குள் புகுந்து 57 மா மரங்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளது மேலும் அப்பகுதியில் பல தென்னை மரங்களையும் சாய்த்து யானை சேதப்படுத்தியுள்ளது.



அதேபோல் அப்பகுதியில் மக்கள் நடமாடுவதற்கு மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள் இந்த மக்னா யானை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும் மனிதர்களை தாக்கி விடுமோ என்ற அச்சத்திலும் மீண்டும் விவசாய நிலத்திற்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகளும் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்த யானையால் வீடுகளில் இரவு முழுதும் குழந்தைகளை வைத்து பாதுகாப்பின்றி உறங்குவதாகவும் இந்த மக்னா யானையால் உயிர் சேதம் ஏற்படுவதற்குள் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த யானையை விரைவில் பிடித்து கூண்டில் அடைக்க வேண்டும். இல்லை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...