வால்பாறை அருகே குடியிருப்புகளை சேதப்படுத்திய காட்டு யானை!

வால்பாறை அருகே வில்லோணி எஸ்டேட் பகுதியில் டாப் டிவிஷனில் இரவு வந்த ஏழு காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சேதப்படுத்தியது. குடியிருப்புகளில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


கோவை: வால்பாறை அருகே குடியிருப்புகளை காட்டு யானை இடித்து சேதப்படுத்தியது.

கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு யானைகள் நடமாட்டம் எஸ்டேட் பகுதியில் உள்ளது. காட்டு யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அருகே வில்லோணி எஸ்டேட் பகுதியில் டாப் டிவிஷனில் இரவு வந்த ஏழு காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சேதப்படுத்தியது.

குடியிருப்புகளில் தற்போது யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...