இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றுவதற்காக ஓடி வந்து உதவிய கோவை போலீசார்!

உதகையைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு உயர் சிகிச்சை அளிக்க பாண்டிச்சேரிக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர். மருத்துவமனை முதல் விமான நிலையம் வரையில் வேகமாக செல்வதற்காக கோவை மாவட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி உதவி செய்தனர்.


கோவை: உதகையைச் சேர்ந்த பெண்ணை விமான நிலையம் மூலம் பாண்டிச்சேரிக்கு கொண்டு செல்ல மாவட்ட போக்குவரத்து சார்பில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வழிவகை செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை பகுதியில் வசிக்கும் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவின் காரணமாக உயர் சிகிச்சை அளிக்க உடனடியாக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் அழைத்துச் செல்ல வேண்டி இருந்ததால் அப்பெண்ணின் குடும்பத்தார் கோவை மாவட்ட காவல் துறையினரை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் பாண்டிச்சேரிக்கு எந்தவித போக்குவரத்து இடையூறும் இன்றி விரைவாக செல்ல உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.



இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், அன்னூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில், உதவி ஆய்வாளர், காவலர்கள் மற்றும் தனிப்பிரிவு காவல் துறையினர் ஆகியோர் இணைந்து மேற்படி பாதிக்கப்பட்ட பெண் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு சாலையில் எந்தவித இடையூறும் இன்றி செல்ல வழிவகை ஏற்படுத்தி கொடுத்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் காவல்துறையினரை மனதார பாராட்டினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...