கோவையில் லேப்டாப் திருடன் கைது - பென்டிரைவ், ஸ்மார்ட்வாட்ச் பறிமுதல்!

கோவையில் பட்டதாரி இளைஞர் தங்கியிருந்த அறையில் லேப்டாப்-ஐ திருடிச்சென்ற நபரை, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, லேப்டாப், பென்டிரைவ், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் பகுதியில் அறையெடுத்து இளைஞர் ஒருவர் தங்கியுள்ளார்.

அந்த அறையில் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை வைத்துவிட்டு அவர் வெளியே சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது பொருட்கள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.



இது தொடர்பாக, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் மேற்கொண்ட விசாரணையில், பாரதி நேசன் என்ற நபர் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்து.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து லேப்டாப், பென்டிரைவ், ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...