கோவை அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - பழக்கடை உரிமையாளர் உட்பட 2 பேர் பலி

கோவை மலுமிச்சம்பட்டி அருகே காரும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பழக்கடை உரிமையாளர் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து கேரளா மாநிலம் இடுக்கியை சேர்ந்த கார் ஓட்டுநரான அகேஷ்குமார் என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் ரவி (வயது45).

இவர் தனது மகள் கல்லூரி படிப்பிற்காக தற்போது கோவை ஒத்தக்கால் மண்டபம் அசோக் ரெசிடென்சி பகுதியில் குடும்பத்துடன் தங்கி, மலுமிச்சம்பட்டி அருகே கந்தன் ப்ரூட் ஸ்டால் என்ற பழக்கடை வைத்துள்ளார். இவரது கடையில், ஒத்தக்கால்மண்டபம் விவேகானந்தர் வீதியை சேர்ந்த ராமன் (வயது50). என்பவரும் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு இருவரும் வழக்கம்போல் பணி முடிந்து இரவு 11 மணியளவில் ரவியின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு கிளம்பி உள்ளனர். அப்போது பொள்ளாச்சி - கோவை சாலையில் மலுமிச்சம்பட்டி அருகே உள்ள தனியார் கம்பெனி அருகே அவர்களது வாகனம் வேகமாகச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது.



இதில், தூக்கி வீசப்பட்ட ரவி மற்றும் ராமன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செட்டிபாளையம் போலீசார், இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கேரளா மாநிலம் இடுக்கியை சேர்ந்த கார் ஓட்டுனரான அகேஷ்குமார் (24) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...