பல்லடம் அருகே விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

பல்லடம் அருகே சின்னூர் கிராமத்தில் செல்வவிநாயகர் திருக்கோவில் குடமுழுக்கு விழா மற்றும் மாகாளியம்மன் திருக்கோவில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னூர் கிராமத்தில் அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா மற்றும் மாகாளியம்மன் திருக்கோவில் ஆண்டு விழா இன்று நடைபெற்றது.

கடந்த இரண்டாம் தேதி திருக்குடங்கள் மற்றும் முளைப்பாளிகை எடுத்து, விழா தொடங்கிய நிலையில் வேள்விச்சாலை முதல்நிலை வழிபாடுகள், திருவாயில் வழிபாடு, வேள்வி மேடை வழிபாடு, சிறப்பாக நடைபெற்றது.



இதன் தொடர்ச்சியாக, முக்கிய நிகழ்வாக செல்வ விநாயகர் மூலவர் திருக்கோவில் விமான கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு திருவிழா நடைபெற்றது.



சென்சேரி மலை ஆதினம் கயிலை புனிதர் முத்து சிவராமசாமி அடிகளார் தலைமையில் யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் எடுத்துவரப்பட்டு, தமிழ் முறைப்படி மந்திரங்கள் முழங்க, விமான கலசம் மீது புனித நீர் ஊற்றப்பட்டு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.



இதையடுத்து, விநாயகரின் மூலவர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோன்று மாகாளியம்மன் திருக்கோவில் ஆண்டு விழாவை முன்னிட்டு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. திருக்குட நன்னீராட்டு திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...