கோவையில் பிடிபட்ட அரிதான வெள்ளைநிற நாகபாம்பு - மாங்கவரை வனப்பகுதியில் விட்ட வனஆர்வலர்கள்!

கோவை மாநகரப் பகுதியில் மழைநீரில் அரிதான வெள்ளை நிற நாகபாம்பு அடித்துவரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்குச் சென்ற வன ஆர்வலர்கள் அந்த பாம்பை பத்திரமாகப் பிடித்து, மாங்கரை வனப்பகுதிக்குள் விட்டனர்.



கோவை: கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கோவை குறிச்சி சக்தி நகர் பகுதியில் மிகவும் அரிதாக பார்க்கப்படும் வெள்ளை நிறமுடைய சுமார் 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு மழையில் எங்கிருந்தோ அடித்துவரப்பட்டது.



இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வன ஆர்வலர்கள் பாம்பை பத்திரமாக மீட்டு மாங்கரை வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

வெள்ளை நிறத்தில் காணப்படும் அந்த பாம்பை வெள்ளை நாகம் என பொதுமக்கள் பலரும் கூறிய நிலையில், மரபணு பிரச்சனையால் தோல் நிறமி குறைபாடு காரணமாக இவ்வாறு தோற்றமளிப்பதாக வனஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மேலும் இது போன்று தோல் நிறமி குறைபாடுடன் காணப்படும் வெள்ளை நாகபாம்புகள் மிகவும் அரிதானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...