கோவை இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா - பக்தர்கள் சாமி தரிசனம்!

கோவை இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு ஆலயம் வெகு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்த நிலையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கோவை: கோவை இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கோவை இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு ஆலயம் வெகு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.



இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவின் துவக்க நிகழ்ச்சியாக சிறப்பு கோ பூஜை நடைபெற்றது. பிறகு நரசிம்ம ஹோமம் நடைபெற்றது. இதில் "ஜெய நரசிம்ஹா ஸ்ரீ நரசிம்ஹா ஜெய ஜெய நரசிம்ஹா" என்ற முழங்கங்களுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து நரசிம்மருக்கு அபிஷேகம் நடைபெற்று நரசிம்மரின் லீலைகள் குறித்த, சொற்பொழிவு, மகா ஆரத்தி மற்றும் பிரசாத விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முடிவில், அனுகல்ப பிரசாதத்தை, நாள் முழுவதும் விரதமிருந்த பக்தர்கள் ஏற்றுக்கொண்டனர்.

மேலும் கோவையின் பல பகுதிகளில் உள்ள ஏழை எளியோருக்கு உதவிடும் வகையில் உணவு விநியோகம் செய்யப்படும் என்று இஸ்கான் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...