கோவையில் கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது!

கோவை மாவட்டம் வேடப்பட்டியில் சகோதரியுடன் திருமணத்திற்கு மீறிய தொடர்பிலிருந்ததை தட்டிக்கேட்ட ஜெகன்ராஜ் என்பவரை கொலை செய்த வழக்கில், மதன்ராஜ் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


கோவை: வேடப்பட்டியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை மாவட்டம் வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடப்பட்டியை சேர்ந்தவர் மதன்ராஜ் (33). இவர் அதே பகுதியை சேர்ந்த ஜெகன்ராஜ் என்ற நபரின் சகோதரியுடன் திருமணத்திற்கு மீறிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

அதை தட்டி கேட்ட ஜெகன்ராஜை கொலை செய்த குற்றத்திற்காக மதன்ராஜ் மீது வடவள்ளி காவல் ஆய்வாளர் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக மதன்ராஜ் என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் கொலை வழக்கு குற்றவாளியான மதன்ராஜ் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். ‌இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 16 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...