கோவை மதுக்கரை அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை - இளைஞர் கைது!

கோவை மதுக்கரை அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த சுந்தராபுரத்தை சேர்ந்த அஜித்(25) என்ற இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 1.1 கிலோ அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுக்கரை பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மதுக்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் மதுக்கரை அடுத்த சுந்தராபுரம் ரோடு மெகா சிட்டி அருகே சென்று சோதனை மேற்கொண்டனர்.



அப்போது கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த அயாஜி மகன் அஜித்(25) என்பவரை போலீசார், கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 1.1 கிலோ அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டு, அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 221 நபர்கள் மீது 173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர்களிடமிருந்து சுமார் 442.211 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...