முதல்வரின் காலை உணவு திட்டம் குறித்து கோவையில் ஆட்சியர் தலைமையில் நிலைக்குழு கூட்டம்!

முதலமைச்சர் காலை உணவு திட்டமானது வரும் கல்வியாண்டு முதல் ஒன்று முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது தொடர்பாக கோவையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிலைக்குழு கூட்டத்தில் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.


கோவை: கோவையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இரண்டாம் கட்டம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மாவட்ட அளவிலான நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், எதிர்வரும் கல்வி ஆண்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக மாவட்ட அளவிலான நிலைக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மகளிர் திட்ட இயக்குனர் செல்வம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் சத்துணவு திட்ட நேர்முக உதவியாளர் மகேஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கோவை மாவட்டத்தில் எதிர்வரும் கல்வி ஆண்டில் இந்த காலை உணவு திட்டத்தை 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி குழந்தைகளுக்கு எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்தான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...