பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை - கர்ப்பிணி மனைவியுடன் கணவன் கைது!

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 8 மாத கர்ப்பிணியும், அவரது கணவரும் கைதாகியுள்ளனர். காதல் விவகாரம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த அழைத்ததில் ஏற்பட்ட தகராறால் மாணவி கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.



கோவை: கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் சுஜய் (வயது27).

இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மனைவி ரேஷ்மாவுடன் பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி கௌரிநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். ரேஷ்மா தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளார்.



இந்நிலையில், கடந்த 2.ம் தேதி இவரது வீட்டிற்கு கல்லுாரி மாணவி ஒருவர் வந்துள்ளார் சுஜய்க்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் பெண் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதுபற்றி அருகில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் வந்து பார்த்தபோது, சுஜயின் வீட்டினுள் அந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சுஜயும், ரேஷ்மாவும் அங்கிருந்து தப்பி இருசக்கர வாகனத்தின் மூலம் தலைமறைவாகினர். இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மூன்று தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.



இந்நிலையில், இருவரும் கேரளா மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பொள்ளாச்சியில் இருந்து கேரளா செல்லும் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து சுஜய் மற்றும் ரேஷ்மா இருவரையும் தனிப்படை போலீசார், கைது செய்து பொள்ளாச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில், கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த சுஜயும், ரேஷ்மாவும் காதலித்துள்ளனர். இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால், சுஜய் ரேஷ்மா தற்காலிகமாக பிரிந்துள்ளனர். இந்த சமயத்தில் சுஜய் அதே பகுதியைச் சேர்ந்த சுப்புலட்சுமியை என்ற கல்லூரி மாணவியை காதலித்து உள்ளார். சுப்புலட்சுமி அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார்.

சுஜய் முன்னாள் காதலியான ரேஷ்மாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு, சுப்புலட்சுமிக்கு தெரியாமல் விஜய் ரேஷ்மாவை திருமணம் செய்து பொள்ளாச்சி டி.கோட்டம்பட்டி பகுதியில் தனியாக குடும்பம் நடத்தி வந்தார். சுஜய் அடிக்கடி சுப்புலட்சுமியுடன் ரகசியமாக செல்போனில் பேசி வந்துள்ளார் இதனால் சுஜ்யிக்கும் ரேஷ்மாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், சுப்புலட்சுமியை பேச்சுவார்த்தைக்கு கடந்த 2.ம் தேதி சுஜய் அழைத்ததால் பொள்ளாச்சி வந்துள்ளார். சுஜயின் வீட்டுக்குச் சென்றபோதுதான் சுஜய்க்கும், ரேஷ்மாவுக்கும் திருமணம் செய்து கொண்டது தெரிந்து சுப்புலட்சுமி அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது சுப்புலட்சுமிக்கும் ரேஷ்மாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறி உள்ளது.

இந்த வாக்குவாதம் அதிகமானதால் ஆத்திரத்தில் இருந்த ரேஷ்மா மற்றும் அவரது கணவர் சுஜய் அருகே இருந்த கத்தியை எடுத்து இருவரும் சேர்ந்து சுப்புலட்சுமியின் உடலில் பல இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளனர். அதில் சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்பு சுஜயும், ரேஷ்மாவும் அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பின்னர் 8 மாத கர்ப்பிணியான ரேஷ்மா மற்றும் கணவன் சுஜய் இருவரையும் போலீசார் கைது செய்து, இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்து 36 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...