ஓடும் பேருந்தில் பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர் - பல்லடம் காவல்நிலையத்தில் புகார்!

கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பெண்ணிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தகராறில் ஈடுபட்ட இளைஞர் மீது பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

அந்தப் பேருந்து பல்லடம் அருகே வந்தபோது, சூலூரில் இருந்து பயணித்த இளைஞர் ஒருவர், அதே பேருந்தில் பணி முடிந்து கோவை ஒண்டிப்புதூரில் இருந்து வீடு திரும்பிய பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.



இதனால், அந்தப் பெண் பேருந்து ஓட்டுனரிடம் பேருந்தை பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனால், பயணிகளோடு அரசு பேருந்து ஓட்டுநர் பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தினார். தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தகராறில் ஈடுபட்ட இளைஞர் மீது அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், அந்த இளைஞரிடம் மகளிர் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென பயணிகளோடு அரசு பேருந்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...