கோவை அருகே அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு - எம்.எல்.ஏ அருண்குமார் பங்கேற்பு

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் அதிமுக நகர கழகம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதி, அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ கலந்துகொண்டு, மோர், லெமன் ஜூஸ், வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணிப்பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.



கோவை: தமிழகத்தில் நிலவிவரும் கோடை வெயிலின் தாக்கத்தை பொதுமக்கள் தணிக்கும் விதமாக, அதிமுக சார்பாக ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக நகர் கழகம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் மற்றும் முன்னாள் பேரூராட்சித்தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தார்.

நீர் மோர் பந்தலை அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்,



பின்னர், அங்கிருந்த பொதுமக்களுக்கு, அவர் மோர், லெமன் ஜூஸ், வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணிப்பழங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பி.ஏ, வேலுசாமி, வி.லட்சுமணசாமி, வி.சிவகுமார், முத்துசாமி, சம்பத்குமார், பி.எம்.நாகராஜ், சண்முகம், ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...