குனியமுத்தூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபர் சாலையோரம் சடலமாக மீட்பு!

கோவை குனியமுத்தூர் ரைஸ் மில் ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (42). மனநலம் பாதிக்கப்பட்டவர். இன்று காலை சாலையில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த நிலையில் நாகராஜ் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: குனியமுத்தூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபர், சாலையோரம் சடலமாக மீட்கப்பட்டார்.

கோவை குனியமுத்தூர் ரைஸ் மில் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (42). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் சிறு வயதில் இருந்தே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் சுற்றி திரிந்து வந்துள்ளார். அவரது உறவினர்கள் அதே பகுதிகளில் வசித்து வருவதால் அனைவரும் கவனித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை நாகராஜ் சாலையில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து வந்த குனியமுத்தூர் போலீசார் நாகராஜ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...