சித்ரா பௌர்ணமியை ஒட்டி வெள்ளியங்கிரி சிவன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

கோவையில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரிமலை சிவன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். இங்கு வரும் பக்தர்களில் பலரும் ஏழுமலை ஏறி சிவனை வழிபட்டு வருகின்றனர். இவர்களுடன் சிவனடியார்களும் மலையேறி சிவனை வழிபாடு செய்து வருகின்றனர்.


கோவை: சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரி சிவன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோவையில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரிமலை சிவன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். இங்கு வரும் பக்தர்களில் பலரும் ஏழுமலை ஏறி சிவனை வழிபட்டு வருகின்றனர். இவர்களுடன் சிவனடியார்களும் மலையேறி சிவனை வழிபாடு செய்து வருகின்றனர்.

இதனால் இன்றைய தினம் வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. அதிகாலையிலிருந்து பக்தர்கள் மலை ஏறி சென்று சிவ பாடல்கள் பாடியும் சிவ நாமங்களை முழக்கமிட்ட படியும் சிவனை வழிப்பட்டு வருகின்றனர்.



மேலும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று வருகை புரிவதால் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பிலும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பக்தர்கள் மலை ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இரண்டு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தற்காலிக கழிவறை வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வருகிறார்களா என்பதை கண்காணிக்கவும் தனியார் அமைப்புகள், என்சிசி மற்றும் என்எஸ்எஸ் மாணவர்கள் சார்பில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கோவை மாநகரிலிருந்து வெள்ளியங்கிரி மலைக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதேசமயம் கோவில் அடிவாரத்திலும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு குறிப்பிட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...