பல்லடத்தில் தென்னை சாகுபடி குறித்த வயல்மட்டக் கள ஆய்வு - செய்தித்துறை அமைச்சர் பங்கேற்பு!

பல்லடம் அருகே பெருந்தொழுவு ஊராட்சியில் நடைபெற்ற தென்னையில் பூச்சி நோய் மற்றும் உர நிர்வாகம் குறித்த வயல்மட்ட களஆய்வில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், பெருந்தொழுவு ஊராட்சியில் வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தென்னையில் பூச்சி, நோய் மற்றும் உர நிர்வாகம் குறித்த வயல் மட்ட களஆய்வு நடைபெற்றது.



இந்த ஆய்வானது செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையிலும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினித் முன்னிலையிலும் நடைபெற்றது.

இது குறித்துப் பேசிய செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்,



தமிழக அரசு தென்னையை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நல்ல விலையை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.

நீண்ட கால பயிரான தென்னையில் நோய் பாதிப்பு என்ற சூழ்நிலையை நீக்க வேண்டும் என்கிற வகையில் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 52 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.எஸ்.வினீத்,



இயற்கை உரங்களை பயன்படுத்தி தென்னை மகசூலை அதிகரிக்கவும் விவசாயிகளை கேட்டுக் கொண்டார்.

இந்த களஆய்வில் தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர்கள், வேளாண் இணை இயக்குநர் மாரியப்பன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர்கள், மற்றும் தென்னை விவசாயிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...