'தி கேரளா ஸ்டோரி' வெளியான திரையரங்கை முற்றுகையிட முயற்சி - கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் கைது!

கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியான திரையரங்கை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால் புரூக்பாண்ட் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஹிந்தி மொழியில் இன்று திரையிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புரூக்பாண்ட் சாலையில் உள்ள புரூக்பீல்ட்ஸ் மாலில் எஸ்டிபிஐ கட்சியினர் மாவட்ட செயலாளர் உசேன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, புரூக்பாண்ட் சாலை சிக்னல் அருகே முற்றுகையில் ஈடுபட முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.



இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக இப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...