மேட்டுப்பாளையம் அருகே பசு மாட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை!

மேட்டுப்பாளையம் அருகேயுள்ள முத்துக்கல்லூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனக்கு சொந்தமான பசுமாடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு ஓட்டிச் சென்ற போது, சிறுத்தை ஒன்று பசுமாட்டை அடித்துக் கொன்றது.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுவை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட முத்துக்கல்லூர் பகுதியில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருபவர் கோவிந்தராஜ். இவர் 10 பசுமாடுகளை வைத்து பால் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று மாலை முத்துக்கல்லூர் கிராமத்தில் தோகைமலை அடிவார பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு மேய்ச்சல் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு ஒன்றை, சிறுத்தை தாக்கி இழுத்து சென்றுள்ளது.

பசுமாட்டின் அலறல் சத்தம் கேட்டு அங்கு கோவிந்தராஜ் சென்று பார்த்தபோது அங்கு புதரில் மறைந்து இருந்த சிறுத்தை, பசுமாட்டை கடித்து இழுத்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கோவிந்தராஜ் இதுகுறித்து காரமடை வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த காரமடை வனத்துறையினர், அங்கு சென்று பார்த்தபோது பசுமாடு இறந்த நிலையில் கிடந்தது.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...