சித்ரா பவுர்ணமி நாளில் வெள்ளியங்கிரிமலை ஏறிய மேலும் ஒருவர் பலி!

கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்த குமார் (40), சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலையில் ஏறிய போது, மயங்கி விழுந்து சம்பவ இடத்தில் பலியானார். அவரை சோதித்த மருத்துவ உதவியாளர், மாரடைப்பில் குமார் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார்.


கோவை: வெள்ளியங்கிரி மலையில் ஏறிய மேலும் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் குமார் (40). இவர் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு கோவை பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு வந்துள்ளார். இன்று மதியம் ஏழாவது மலைக்குச் சென்ற குமார் அங்கு சுயம்புலிங்கத்தை தரிசனம் செய்து விட்டு மீண்டும் கீழே இறங்கி உள்ளார்.

அப்போது ஆறாவது மலைக்கு வந்த போது திடீரென மயங்கி விழுந்த குமாரை அங்கிருந்த வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு, மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் இருந்த உதவி மருத்துவர் சோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

குமார் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்ட ஆலாந்துறை போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...