கோவை குனியமுத்தூரில் தீயணைப்பான் வெடித்து கல்லூரி மாணவனுக்கு கால் முறிவு!

கோவை குனியமுத்தூரில் பழைய இரும்பு கடையிலிருந்த தீயணைப்பான் வெடித்ததில் சாலையில் சென்ற அருண்குமார் என்ற கல்லூரி மாணவனின் கால் முறிந்தது. விபத்து தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: குனியமுத்தூரில் தீயணைப்பான் வெடித்ததில் கல்லூரி மாணவன் கால் முறிந்தது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அருண்குமார் தனது பைக்கில் நண்பர் ஹரிபிரசாத் என்பவருடன் பாலக்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, குனியமுத்தூர் நரசிம்மபுரம் அருகே வந்தபோது அப்பகுதியில் சாலை ஓரத்திலிருந்த பழைய இரும்பு பொருட்கள் கடையிலிருந்து, பயங்கர சத்தத்துடன் தீயணைப்பான் வெடித்து சிதறி சாலையில் பைக்கில் சென்ற அருண்குமார் காலில் அடித்துள்ளது.



இதில் இடது காலில் அருண்குமாருக்கு முறிவு ஏற்பட்டது. மேலும் தவறி விழுந்ததில் ஹரிபிரசாத்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. விசாரணையில் குமார் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடைக்கு வந்த நபர் ஒருவர் 3 பழைய தீயணைப்பானை கொடுத்ததாகவும், அதனை சோதனை செய்தபோது ஒரு தீயணைப்பான் வெடித்து சிதறி அருண்குமார் மீது பட்டதும் தெரியவந்தது.



விபத்து தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...