திருப்பூரில் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி பலி!

திருப்பூரில் பிரிண்டிங் நிறுவன கட்டுமான சுவர் சரிந்து விழுந்ததில், கட்டிட தொழிலாளி ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி பலியானார்.

திருப்பூர் - கொங்கு மெயின் ரோடு, கந்தசாமி லே அவுட்டை சேர்ந்தவர் முத்துராஜா(40). இவர் தனக்கு சொந்தமான கட்டடத்தில் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கட்டத்தில் மராமத்து பணிகள் நடைபெற்று வந்தது. இதில் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ராம்மூர்த்தி(50), பிரவீன்(22) ஆகியோர் வேலை செய்து வந்தனர்.



இன்று மதியம் இருவரும் கட்டட பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென கட்டடத்தின் ஒரு பகுதியில் இருந்த சுவர் சரிந்து இருவர் மீதும் விழுந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் சுவர் விழுந்து படுகாயமடைந்த ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.

பலத்த காயமடைந்த பிரவீனை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிசசைக்காக சேர்த்தனர்.



இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார், ராமமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



மேலும், சம்பவம் தொடர்பாக வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...