கோவை அருகே நொய்யல் ஆற்றில் ரசாயனக் கழிவு நீர் கலப்பு - காற்றில் பறக்கும் நுரையால் மக்கள் அச்சம்!

கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியில் இருந்து பட்டண பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள நொய்யல் ஆற்றில் நுரை ததும்பும் ரசாயன கழிவுகள் தண்ணீரில் கலந்து செல்கின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.



கோவை: குப்பை, பிளாஸ்டிக் கழிவு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனங்கள் உள்ளிட்ட கழிவுகளுடன் நொய்யல் ஆறு பயணித்து வருகிறது.



கோவை மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வரும் நிலையில் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.



இதனைப் பயன்படுத்தி, கோவையில் உள்ள தொழிற்சாலையில் பட்டறைகளில் இருந்து சாயம், ஆயில் உள்ளிட்ட ரசாயன கழிவுகள் வெளியேற்றப்பட்டு நொய்யல் ஆற்று நீரில் கலக்கப்படுகின்றன.

இதனால், கோவை ஒண்டிப்புத்தூர் நெசவாளர்காலனியில் இருந்து பட்டணம் பகுதி செல்லும் வழியில் உள்ள அணைக்கட்டில், நொய்யல் ஆறானது சாக்கடை கழிவு நீர் கலந்த நிலையில், கருமை நிறமாக காட்சியளிக்கிறது.



ஆற்றில் கலக்கப்படும் இதுபோன்ற கழிவுகளால், காற்றில் அவற்றின் நுரைகள் பறந்து வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...