கோவையில் வாய்த்தகராறில் சிறுவன் மீது தாக்குதல் - மற்றொரு சிறுவன் கைது

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக பள்ளி சிறுவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு சிறுவனை மற்றொரு சிறுவன் ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு படிக்கும்போது, தன்னுடன் படித்த சிறுமியை காதலித்து வந்தார்.

இதனால், சிறுவனுக்கும், சிறுமியின் அண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சிறுமியின் அண்ணன் அச்சிறுவனை தாக்கியுள்ளார். இந்நிலையில் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள மகாளியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்ததுள்ளது.

அங்கு சிறுவன் மற்றும் அவரது நண்பர் ஜெகதீஷ் ஆகியோர் வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த சிறுமியின் அண்ணன் மீண்டும் அச்சிறுவனை அழைத்து தகராறு செய்துள்ளார். அப்போது, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்ட நிலையில், அதை தடுக்க சென்ற நண்பர் ஜெகதீஷை, சிறுமியின் அண்ணன் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்நிலையில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...