திருப்பூர் வடமாநில நபர் சந்தேகத்தின் பேரில் கைது - பின்னால் சென்ற மனநலம் பாதித்த சிறுவனை காணவில்லை என புகார்!

திருப்பூரில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பூஷன் என்பவரை போலீசார், கஞ்சா விற்பனை செய்வதாக சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற வாகனத்தின் பின்னால் அழுதுகொண்டே சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவனை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: வடமாநில நபர் கஞ்சா விற்பதாக காவல் நிலையம் அழைத்துச் சென்ற நிலையில், அவருடன் சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த பூஷன் என்பவர் தனது மனைவி ராணி தேவி ஆகியோர் திருப்பூர், சந்தைப்பேட்டை பகுதியில் இரண்டு ஆண் குழந்தைகளோடு டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் தெற்கு காவல் துறையினர் பூசன் கஞ்சா விற்பனை செய்வதாக சந்தேகத்தின் பேரில் அவரை விசாரணைக்கு போலீஸ் வாகனத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது அவரது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த ஐந்து வயது மகனான கெளரப்குமார் என்ற சிறுவன் தந்தை சென்ற காவல்துறை வாகனத்திற்கு பின்னே அழுதவாறுச் சென்றுள்ளார்.

விசாரணை முடிந்து வீட்டிற்கு வந்த பூஷனிடம் மகனை காணவில்லை என மனைவி தெரிவித்த நிலையில் அதிர்ச்சி அடைந்த பூஷன் மற்றும் அவரது மனைவி அருகில் இருந்த கடையின் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர்.



அப்போது மனநலம் பாதிக்கப்பட்டிருந்த ஐந்து வயது சிறுவன், காவல்துறை வாகனத்திற்கு பின்னால் சென்றதும், பின்பு காணாமல் போனதும் தெரிய வந்தது. இது குறித்து வட மாநில தம்பதியினர் சைல்டு ஹெல்ப் லைன் அமைப்பிற்கு புகார் அளித்து காணாமல் போன சிறுவனை தேடி வருகின்றனர்.

இதனிடையே பூஷன் மீது மூன்று வருடத்திற்கு முன்பாக திருப்பூரில் சட்டவிராத புகையிலை பொருட்கள் விற்றதாக வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...