கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் உண்மை சம்பவம் காட்டப்பட்டுள்ளது..! - இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவை ப்ரோசோன் மாலில் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்த திரைப்படம் லவ் ஜிகாத் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது என்றும், கேரளா ஸ்டோரி படத்தை தமிழகத்தில் தமிழில் திரையிட வேண்டும் என்றார்.


கோவை: லவ் ஜிகாத் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழகத்தில் தமிழில் திரையிட வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.



கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ப்ரோசோன் மாலில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் உண்மை சம்பவங்கள் காட்டப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த திரைப்படம் பயன்படும். இந்த திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட வேண்டும், குறிப்பாக தமிழகத்தில் தமிழில் திரையிடப்பட வேண்டும்.

உண்மையான சம்பவத்தை திரைப்படமாக எடுத்துள்ளனர். இப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் திண்டுக்கல், தேனி, தாராபுரம், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் லவ் ஜிகாத் என்ற பெயரில் பெண்கள் மதமாற்றம் செய்யபட்டுள்ள சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

குறிப்பாக தாராபுரம் பகுதியில் காவல் ஆய்வாளர் ஒருவரது மகள், லவ் ஜிகாத் என்ற பெயரில் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த காவல் ஆய்வாளர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவமும் நிகழ்ந்துள்ளது. எனவே இது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படமாக உள்ளது. ஆகவே இந்த திரைப்படத்தை எதிர்ப்பவர்களும், அரசும் விழிப்புணர்வோடு திரையிட்டு திரைப்படத்தை ஓட வைக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சியினர் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது போன்ற சம்பவங்களை வீடுகளில் சென்று அக்கட்சியினர் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...