மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் கோவையை சேர்ந்த இளைஞருக்கு அமெரிக்க அரசு பாராட்டு!

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கான விளையாட்டு கல்விக்கூடங்களை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டு தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் கோவையை சேர்ந்த குணசேகரனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



கோவை: மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக பல்வேறு உதவிகளையும், அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் கோவையை சேர்ந்த இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கோவையை சேர்ந்தவர் குணசேகரன். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர், தனது மாமாவின் உதவியுடன் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். பின்னர் சேலத்தில் உள்ள சோனா தொழில்நுட்ப கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் இளங்கலை பயின்றுள்ளார். தொடர்ந்து, 2008ஆம் ஆண்டு கேரளாவின் திருவனந்தபுரத்தில் US டெக்னாலஜிஸில் பணியாற்ற தொடங்கியுள்ளார்.

விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதிலும், கிரிக்கெட் விளையாடுவதிலும், தன்னார்வத் தொண்டு செய்வதிலும் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்த அவர், 2010ல் கோயம்புத்தூரில் உள்ள காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில், காக்னிசண்ட் அவுட்ரீச் மூலம் பாரா-ஸ்போர்ட்ஸ் நிகழ்வுகளில் தன்னார்வத் தொண்டு செய்த குணசேகரனின் அனுபவம், பாரா-ஸ்போர்ட்ஸ் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வெறும் தன்னார்வலர்கள் வழங்குவதை விட அதிக ஆதரவு தேவை என்பதைப் புரிந்துகொண்டுள்ளார்.

இதன் காரணமாக2017 ஆகஸ்டில் சிட்ருளி அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் கோவை கங்கா மருத்துவமனை மற்றும் காக்னிசன்ட் அவுட்ரீச் குழுவின் உதவியுடன், கோவையில் உள்ள கங்கா முதுகெலும்பு மறுவாழ்வு மையத்தில் பயிற்சிக்காக பிரத்யேக கூடைப்பந்து மைதானத்தை நிறுவியுள்ளனர்.

மேலும், மோட்டிவேஷன் இந்தியாவுடன் இணைந்து மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான 15 விளையாட்டு சக்கர நாற்காலிகளை வாங்கியுள்ளனர்.

தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு முதல், அவரது இந்த அறக்கட்டளை மூன்று மாநில அளவிலான போட்டிகள், ஒரு தென்னிந்திய மண்டல போட்டி மற்றும் வாரணாசியில் ஒரு கண்காட்சி, மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக கல்வி நிறுவனங்களில் கண்காட்சி மற்றும் பாரா-விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

தொடர்ச்சியான முயற்சிகளால், கங்கா மருத்துவமனை இப்போது கோயம்புத்தூரில் முதன்முதலாக பிரத்யேக மாற்றுத்திறனாளிகள் / அடாப்டிவ் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மறுவாழ்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதற்கான நிலம் நிலத்தை தேர்வு செய்துள்ளது. அடுத்த கட்ட திட்டமிடல் 2023 முதல் பாதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக குணசேகரன் கூறியதாவது, மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு கல்விக்கூடங்களை உருவாக்குவது தான் எனது நோக்கம். அவை உயர் செயல்திறன் மற்றும் அடிமட்ட அளவிலான பயிற்சியை வழங்கும் சிறந்த மையங்களாக செயல்படும்.

இந்த மையங்கள் இந்தியாவில் ஊனமுற்றோர் விளையாட்டுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு ஆராய்ச்சியை தொடரவும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும். 2027 ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டில் இதுபோன்ற ஒரு மையத்தை நிறுவவும், 2035 க்கு முன், இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களிலும் இதேபோன்ற மையங்களை உருவாக்குவதே எனது விருப்பம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...