திருப்பூரில் கோவிலில் நகைகள் கொள்ளை - சிசிடிவி காட்சிகளை கொண்டு வடமாநிலத்தவரை கைது செய்த போலீஸ்!

திருப்பூர் அடுத்த செவந்தாம்பாளையம் பகுதியில் உள்ள கோவிலில் உண்டியல் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு நடத்தி விசாரணையில், ஜீவா நகரில் வசித்து வந்த வடமாநில நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் அடுத்த செவந்தாம்பாளையம் அருகே கோவில் நகைகளை திருடிச்சென்ற வடமாநிலத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் செவந்தாம்பாளையம் பகுதியில் மாகாளியம்மன் திருக்கோவிலில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல் நேற்று இரவு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், இன்று காலை கோவிலுக்கு சென்ற பொதுமக்கள், அங்கு கோவில் பூட்டு உடைக்கப்பட்டும், அறையில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து, நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.



இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது சாமி கழுத்தில் இருந்த 12 பவுன் நகை மற்றும் கோவில் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.



தொடர்ந்து, அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது அதே பகுதியை சேர்ந்த ஜீவா நகரில் வசித்து வந்த வடமாநிலத்தவர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக வடமாநில நபரை கைது செய்த போலீசார், நல்லூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...