வால்பாறையில் திமுக ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வால்பாறையில் உள்ள அண்ணா திடலில் நடைபெற்றது. இதில் சிறப்பு பேச்சாளராக மாணவரணி துணைச் செயலாளர் ஜெ.வீரமணி ராஜ்குமார் மற்றும் கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் வால்பாறை நகரச் செயலாளர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கோவை: வால்பாறையில் திமுக ஆட்சி இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் திமுகவின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் அண்ணா திடலில் நடைபெற்றது.



இதில் சிறப்புரை பேச்சாளராக மாணவரணி துணைச் செயலாளர் ஜெ வீரமணி ராஜ்குமார் மற்றும் கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் வால்பாறை நகரச் செயலாளர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர்கள் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு சுமார் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளது. வால்பாறையில் பத்தாண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட வளர்ச்சிப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் 90% செயல்படுத்தப்பட்டுள்ளது.தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 425 ரூபாய் விரைவில் வழங்கப்படும்.

மேலும் மற்ற நகரங்களில் அரசு பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிப்பது போல் வால்பாறை பகுதியிலும் விரைவில் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க வலியுறுத்தப்படும் அஎன்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...