மாசற்ற காற்றை சுவாசிக்க மரம் நடுங்கள்..! - கோவையில் ஆக்சிஜன் சிலிண்டரை பொருத்தி விழிப்புணர்வு

கோவையில் மரம் நடும் திட்டத்தை வலியுறுத்தும் வகையில்  வ.உ.சி சேவா அறக்கட்டளை சார்பில் மாதிரி ஆக்சிஜன் சிலிண்டரை பொருத்தி நூதன முறையில் விழிப்புணர்வு பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையை சேர்ந்த வ.உ.சி சேவா அறக்கட்டளையினர் ஒரே ஒரு மரம் நடுவோம் நாளைய தலைமுறை காப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் மாதிரி ஆக்சிஜன் சிலிண்டரை அணிந்தவாறு விழிப்புணர்வை தொடங்கியுள்ளனர்.

அடுத்த தலைமுறை மாசற்ற காற்றை சுவாசிப்பதை உறுதி செய்யும் வகையிலும், காற்றை காசு கொடுத்து வாங்கும் சூழ்நிலை உருவாகிவிடக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும் மாதிரி ஆக்ஸிஜன் சிலிண்டரை அணிந்தவாறு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.



அதன்படி, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாதிரி ஆக்ஸிஜன் சிலிண்டரை முதுகில் பொருத்தியவாறு பதாகைகளை ஏந்தி வ.உ.சி. சேவா அறக்கட்டளையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இது குறித்துப் பேசிய அவர்கள்,இனி வரும் நாட்களில் இது போன்ற விழிப்புணர்வை வாரம் தோறும் பல்வேறு இடங்களில் முன்னெடுக்க உள்ளோம்.சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையோரங்களில் இருக்கின்ற மரங்களை வெட்டினால், அதற்கு ஈடாக கூடுதல் மரங்களை வேறு இடங்களில் வளர்க்க வேண்டும். அரசாங்கம் மட்டும் இல்லாமல் பொதுமக்களும் தாமாக முன்வந்து மரங்களை வளர்க்க வேண்டும், என்றனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வ.உ.சி சேவா அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி முத்துவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...