12ம் வகுப்பு தேர்வு முடிவு - மாநில அளவில் 2ம் இடம் பிடித்த திருப்பூர் மாவட்டம்!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட  நான் முதல்வன், மாணவர்களின் கையேடு ஆகிய திட்டங்களால் திருப்பூர் மாவட்டம் இன்று மாநில அளவில் இரண்டாம் இடமும், அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்:தமிழக முழுவதும் பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடந்தது.

இதில் திருப்பூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 747 மாணவர்கள், 13 ஆயிரத்து 868 மாணவியர் உள்பட 24 ஆயிரத்து 732 பேர் தேர்வை எழுதினர். இதைத்தொடர்ந்து, தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியானது ஏப்ரல் 10ம் தேதி தொடங்கி ஏப்ரல் 24ம் தேதி வரையில் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணி அளவில் வெளியிடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 24,185 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 97.79 சதவிதம் பெற்று தமிழக அளவில் திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அதே நேரத்தில் அரசு பள்ளிகள் அளவில் திருப்பூர் மாவட்ட 96.45 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வு முடிவில், திருப்பூர் மாவட்டம் ஏழாம் இடம் பிடித்திருந்தது. இந்த ஆண்டில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி இருப்பது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு பள்ளிகள் மட்டத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்திருப்பது கல்வியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பள்ளி கல்வித்துறைக்கு கவனம் ஒதுக்கி பள்ளிகளில் ஆய்வு செய்து எங்களுக்கு ஊக்கம் அளித்த காரணத்தால் அரசுப் பள்ளியில் 96.45 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெற்று மாநில அளவில் முதலிடம் பிடிக்க முடிந்தது. மேலும் 97.79சதவீதம் பெற்று மாவட்டம் அளவில் 2ம் இடம் பிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து பள்ளி கல்வித்துறைக்கு பல்வேறு செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக நான் முதல்வன், மாணவர்களுக்கான கையேடு என பல்வேறு திட்டங்களை தீட்டி இருப்பதால், அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகமாக படித்து வருகின்றனர்.

மேலும் திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாநில அளவில் முதலிடத்தை பிடிப்போம். திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ள 19 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...