வால்பாறை அருகே அறிவிப்பின்றி நடைபெறும் சாலை பணி - அரசு பேருந்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி!

வால்பாறை - அதிரப்பள்ளி இடையேயான சாலையில் சோலையார் பகுதியில் இருந்து பன்னிமேடு எஸ்டேட் வரையிலான சுமார் 14 கிலோமீட்டர் தொலைவு வரை தார் சாலை அமைக்கும் பணிகள் முன்னறிவிப்பின்றி மீண்டும் தொடங்கப்பட்டதால் அரசு பேருந்து, இருசக்கர வாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் நடுவழியில் முடிஸ் பகுதி அருகே நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.


கோவை: வால்பாறை அருகே அறிவிப்பின்றி நடைபெற்று வரும் சாலை பணிகள் காரணமாக அரசு பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நீண்ட நாளாக கிடப்பில் இருந்த தார் சாலை பணிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் வழியில் சோலையார் பகுதியில் இருந்து பன்னிமேடு எஸ்டேட் வரையிலான சுமார் 14 கிலோமீட்டர் தொலைவு வரையிலான இந்த தார் சாலை அமைக்கும் பணி 14 கோடி மதிப்பீட்டில் துவக்கப்பட்டது.

பணிகள் துவங்கி 4 மாதங்கள் ஆகிய நிலையில் இந்த பணிகள் தற்போது வரை நிறைவடையாமல் சாலை பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.



இதனால் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளும், பொது மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதாலும் சாலையை பராமரிப்பு பணிக்காக தோண்டி போட்டு உள்ளதாலும் இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.



இந்நிலையில் இன்று முன்னறிவிப்பு இல்லாமல் நல்லமுடி பகுதியில் இருந்து முடிஸ் எஸ்டேட் வரை பிரிவு சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால். முடிஸ் பகுதியில் அரசு பேருந்து, இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோ, ஆம்புலன்ஸ் போன்றவைகளை நிறுத்தி வைக்கப்பட்டது.



அதேபோல் வால்பாறையில் இருந்து வரும் அரசு பேருந்து சுற்றுலா வாகனங்கள், லாரி போன்ற வாகனங்களை நல்லமுடி பிரிவு பகுதியில் 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

முன்னறிவிப்பு இல்லாமல் தார் சாலையை போடுவதால் இப்பிரச்சினை வருவதாகவும் இரவு நேரத்தில் தார் சாலை பணிகளை செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...