போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை அபகரிக்க முயற்சி - மகன்கள் மீது மூதாட்டி புகார்!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அங்காத்தாள் என்ற 96 வயது மூதாட்டி, தனது பெயரில் உள்ள சொத்துக்களை மகன்கள் மூன்று பேரும் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துக் கொண்டு மகளுக்கு பாகம் தராமல் ஏமாற்றுவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே சொத்துக்களை போல ஆவணங்கள் மூலம் மகன்கள் அபகரிக்க முயல்வதாக 96 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி அங்காத்தாள் (96). இவருக்கு துரைசாமி, லோகநாதன், கந்தர் மணி என்ற மூன்று மகன்கள் மற்றும் ஜெயலட்சுமி என்ற ஒரு மகள் உள்ளனர்.

இவரது கணவர் 16 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மூன்று மகன்களும் தனித்தனியாக வசித்து வரக்கூடிய நிலையில் மகள் ஜெயலட்சுமி உடன் வசித்து வருகிறார்.



இந்த நிலையில் தற்போது தனது பெயரில் உள்ள சொத்துக்களை மூன்று மகன்களும் சேர்ந்து அபகரித்துக் கொண்டு மகளுக்கு அதில் பாகம் தராமல் ஏமாற்ற முயற்சி நடப்பதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தனது பெயரில் இருந்த வாக்காளர் அடையாள அட்டை , குடும்ப அட்டை , ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அழித்துவிட்டனர். மேலும் தனது பெயரில் உள்ள சொத்துக்களை மூன்று பேரும் எடுத்துக் கொள்ளும் வகையில் போலியான ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் அவர்கள் மூவரிடமும் விசாரித்து போலி ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும். மேலும் தனது புகாரை காவல்துறையின் நில அபகரிப்பு பிரிவுக்கு மாற்றம் செய்து விசாரணை மேற்கோள்ள உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...