போளுவாம்பட்டி வனப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த பழங்குடி பெண் சடலம் - பரபரப்பு!

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனப்பகுதியில் வனத்துறை ரோந்து பணியின் போது, இறந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், அவர் ஜவ்வுக்காடு பகுதியை பழங்குடியின பெண் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது.


கோவை: போளுவாம்பட்டி வனப்பகுதியில் அழுகிய நிலையில் பழங்குடி பெண் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை அடுத்த போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட தண்ணீர் பந்தல் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இறந்து அழுகிய நிலையில் பெண் ஒருவர் சடலமாக இருப்பதை ஊழியர்கள் கண்டறிந்தனர்.

இதையடுத்து அவர்கள் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போளுவாம்பட்டி வனச்சரகர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் யானை தாக்கி உயிரிழந்த தடயங்கள் இல்லாததால் உடனடியாக அவர்கள் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த போலீசார் அழுகிய நிலையில் இருந்த பெண் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் ஜவ்வுக்காடு பழங்குடி கிராமத்தை சேர்ந்த பாப்பன் என்பவரது மனைவி காளியம்மாள் (56) என்பதும், இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பதும் தெரியவந்தது.

மேலும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட காளியம்மாள் எதற்காக வனப்பகுதிக்கு வந்தார். கொலையா? என்பது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...