ஊராட்சித் தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் - சூலூர் அருகே பரபரப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அருகே ஊராட்சி பெண் தலைவரை கண்டித்து திமுக கவும்சிலர்கள் மூவர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, பெண் ஊராட்சி தலைவருக்கு ஆதரவாக பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஒன்றுகூடி போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.


கோவை: சூலூர் அருகே பெண் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் மூவர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த செலக்கரிச்சல் ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளில் சுமார் 6,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மரகதவடிவு என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார்.

இதில் 4 அதிமுக கவுன்சிலர்கள் சுயேட்சையாக வெற்றி பெற்று திமுகவுக்கு ஆதரவளித்து வரும் 5 கவுன்சிலர்களும் உள்ளனர். இந்நிலையில் அதிமுக மெஜாரிட்டியாக உள்ளதால் அதிமுக பெண் தலைவராக மரகத வடிவு இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக ஊராட்சி கூட்டங்களுக்கு இந்த ஐந்து பேரும் வராமல் இருந்துள்ளனர். ஊராட்சி செயல்பாடுகளில் முறையாக நடைபெறவில்லை எனத் தொடர்ந்து கூட்டங்களை புறக்கணித்து வந்துள்ளனர்.



மேலும் தலைவர், கவுன்சிலர்களை மதிக்கவில்லை எனவும் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இதனையடுத்து, பெண் ஊராட்சி மன்ற தலைவர் மரகத வடிவுக்கு ஆதரவாக உள்ளூர் பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட பஞ்சாயத்து கூடுதல் இயக்குனர் கவுன்சிலர்கள் இடையே தலைவருடன் ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டுவந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல்துறையினர், அவர்களிடம் சமரசம் பேசி போராட்டத்தை தற்காலிகமாக கைவிட செய்தனர்.

இந்நிலையில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் மற்றும் மற்ற கவுன்சிலர்கள் தலைவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...