தீண்டாமை சுவற்றை அகற்ற கோரி திருப்பூரில் பொதுமக்கள் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் ஈட்டி வீரம்பாளையத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை சுவரை அகற்ற வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள அருந்ததியர் இன மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: தீண்டாமை சுவரை அகற்ற கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட முட்டையங்கிணறு ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் நிலத்தினை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்து வருகிறது.

விற்பனை செய்யும் வீட்டு மனைகளை ஒட்டி தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் மக்கள் வசிப்பதால் வீட்டு மனைகளை விற்பனை செய்ய முடியாது என எண்ணி அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியை ஒட்டி சுமார் 10 அடி உயரம் வரை சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் சுவரை ஒட்டி சாக்கடை தண்ணீர் மற்றும் மரம் செடிகள் வைத்து அதற்கும் தண்ணீர் அதிகமாக ஊற்றி வருவதால், அருந்ததியினர் மக்கள் வசிக்கும் பகுதி களிமண் பூமி என்பதால் தண்ணீரின் ஈரம் பட்டு 20க்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல் விட்டு இடிந்து விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.



எனவே மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு தீண்டாமை சுவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...