கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் "இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்" கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை மருதம் கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இன்று (1.03.2017) "இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்" என்ற சிறப்பு விற்பனையை கோ-ஆப்டெக்ஸ் தலைவர் கே.வி.மனோகரன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவங்கி வைத்தார்.



இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்:-

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 81-ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்கள் கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு பேரூதவி புரிந்து வருகிறது.

காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளைக் கையாண்டு பலர் புதிய வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

கோ-ஆப்டெக்ஸ் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் "இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்" சிறப்பு விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இத்திட்டம் கைக்குட்டை முதல் பட்டுப்புடவை வரை அனைத்து இரகங்களுக்கும் பொருந்தும்.

வாடிக்கையாளர்கள் இரண்டு வாங்கினால் கூடுதலாக ஒன்று இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் வாடிக்கையாளர் வாங்கும் இரண்டாவது இரகத்திற்குரிய விலைக்குள் அவர்கள் விரும்பும் வேறு எந்த இரகங்களையும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இச்சிறப்பு விற்பனை 22.02.2017 முதல் 28.03.2017 வரை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டுப்புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள் கோவை கோரா காட்டன் சேலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு வகைகள், பருத்தி சட்டைகள், ஸ்லப் சட்டைகள் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன. 

கடந்த ஆண்டு இத்திட்டத்தின்கீழ் கோவை மண்டலத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.257.98 இலட்சங்கள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.350 இலட்சங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மருதம் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு "இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்" சிறப்பு விற்பனைத் திட்டத்தின் கீழ் ரூ.79.57 இலட்சங்கள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.115 இலட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் கோவை மாவட்ட விற்பனை நிலையங்களில் கடந்த ஆண்டு ரூ.137.61 இலட்சங்கள் விற்பனை செய்யப்பட்டது. தற்போதைய விற்பனை இலக்கு ரூ.200 இலட்சங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என  மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இத்திட்டம் குறித்து வாடிக்கையாளர்களுள் ஒருவரான சந்திரகாந்தி தெரிவிக்கையில்:-

கோ-ஆப்டெக்ஸ் கடையில் கடந்த 30 வருடகாலமாக பட்டுப்புடவை மற்றும் எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அனைத்து விதமான ஆடைகளும் வாங்கி வருகிறேன். இங்கு காலத்திற்கேற்ப பல இரகங்களில் துணிகள் கிடைக்கின்றது. 

பண்டிகை காலங்களில் அதிரடி தள்ளுபடி மற்றும் "இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்" என்ற சிறப்பு அதிரடி தள்ளுபடியும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படுகின்றது. அதனால் நான் பயன்பெற்று வருகிறேன். 

மேலும் கோ-ஆப்டெக்ஸ் தயாரிப்புகள் தரம் அதிகமாகவும், அனைத்து நடுத்தர குடும்பத்தினரும் வாங்கி பயணடையும் வகையில் விலையும் குறைவாவும் உள்ளது. மற்ற தனியார் கடைகளில் உள்ளது போன்று தள்ளுபடி விற்பனையில் மறைமுக விலை இங்கு கிடையாது.

நான் இங்கு வாடிக்கையாளராக இருப்பதால் எனது நண்பர்கள் மற்றும் எனது சொந்தங்கள் அனைவரும் இங்கு வாடிக்கையாளர்களாக மாறி பயன்பெற்று வருகிறோம் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் இரா.சுரேஷ்குமார், மேலாளர் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) பி.பாலமுருகன், மேலாளர் (அரசுத்திட்டம்) கே.செல்வராஜ், துணை மண்டல மேலாளர் (தணிக்கை) ஆர்.மோகன்குமார், துணை மண்டல மேலாளர் (நிர்வாகம்) டி.இராதாகிருஷ்ணன், மேலாளர் (மக்கள் தொடர்பு) ஆர்.நடராஜன், மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் பி.நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...