சூலூர் அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை - வடமாநில இளைஞர் கைது!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திலீப் சுனா (29) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா சாக்லேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: சூலூர் பகுதியில் கஞ்சா சாக்லேட் வைத்திருந்த வடமாநிலத்தவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கோலகா சுனா மகன் திலீப் சுனா (29) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ எடையுள்ள கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபரை போலீசார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...