சூலூர் அருகே பேராசிரியர் வீட்டில் 15 சவரன் நகைகள் மற்றும் ரூ.77,000 பணம் கொள்ளை - போலீசார் விசாரணை!

கோவை சூலூர் அருகே கரையாம்பாளையத்தை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் சரவணகுமார் (43). என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த 15 சவரன் நகைகள் மற்றும் ரூ.77,000 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: சூலூர் அருகே தனியார் கல்லூரி பேராசிரியர் வீட்டில் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் அடுத்த கரையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார் (43). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்றுள்ளார்.

அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அறையில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த செயின், வளையல், மோதிரம் உள்பட 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.77,500 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பிச் சென்றனர்.

இதனிடையே இரவு வீட்டிற்கு திரும்பிய சரவணகுமார் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து கொள்ளை சம்பவம் குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் திவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த வீட்டில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளையும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...