சுல்தான்பேட்டை அருகே பைக் மீது கார் மோதி விபத்து - வால்பாறையை சேர்ந்த தம்பதி பலியான சோகம்!

பல்லடம் - பொள்ளாச்சி சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த வால்பாறை அடுத்த மலுக்குபாறையை சேர்ந்த பால்துரை - ஆஷா தம்பதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.


திருப்பூர்: சுல்தான்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் வால்பாறையை சேர்ந்த தம்பதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த மலுக்குபாறை பகுதியை சேர்ந்தவர்கள் பால்துரை (42) - ஆஷா (40) தம்பதி. இந்நிலையில் இருவரும், இருசக்கர வாகனத்தில் பல்லடம் - பொள்ளாச்சி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கணவன்-மனைவி இருவரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணவன் - மனைவி இருவரையும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பால்துரை பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த ஆஷாவை அவரது உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஆஷா பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...