வடவள்ளியில் ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை - 2 பேர் கைது

கோவை வடவள்ளியில் பள்ளி ஆசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் திருடப்பட்ட வழக்கில் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 8 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் சுண்டபாளையம் ஹர்ஷினி கார்டன் பகுதியை சேர்ந்தவர் அன்பு சிவா.

இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது41). இவர் வடவள்ளி மருதமலை தேவஸ்தானம் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த மார்ச் 23ஆம் தேதி வழக்கம்போல் பாக்கியலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் திரும்பிவந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 12 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10,000 மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதையடுத்து, திருட்டு நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் செல்போன் சிக்னல்களை வைத்து திருட்டில் ஈடுபட்ட ஒண்டிப்புதூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் மகன் பிரகாஷ் (33), அன்னூர் செல்லனுர் புது காலனி பகுதியை சேர்ந்த மணி மகன் பிரகாஷ் (26) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் ஆசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தது உறுதியானது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 8 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...