4 நிமிடத்தில் பைக் திருடும் கொள்ளையன் - போலீசார் விசாரணை!

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் கடைக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை, 4 நிமிடத்திற்குள் கொள்ளையன் எடுத்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பைக் கொள்ளையனைத் தேடிவருகின்றனர்.



கோவை: கோவை ராமநாதபுரம் அருகே மணிகண்டன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு கடைக்குள் சென்று இருக்கின்றார்.

கடைக்குள் சென்றுவிட்டு, 4 நிமிடத்தில் அவர் வெளியே வந்து பார்த்தபோது, அந்த வழியாக வந்த பைக் கொள்ளையன், மணிகண்டனின் பைக்கை திருடி சென்று விட்டான். பைக்கை திருடி செல்லும் கொள்ளையனின் வீடியோ அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து மணிகண்டன் அளித்தபுகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன பைக் கொள்ளையனைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...