கோவையில் மழைநீர் கூடுதல் வடிகால் அமைக்கும் திட்டம் - ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை லங்கா கார்னர் பகுதியில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் கூடுதல் மழைநீர் வடிகால்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் ரயில் நிலையம் அருகில் உள்ள லங்கா கார்னர் பகுதியில் மழைக்காலங்களில் அதிக அளவிலான மழை நீர் தேங்கி போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படும் நிலை இருந்துவருகிறது.



இந்நிலையில்,அப்பகுதியில் கூடுதலாக மழை நீர் வடிகால் கட்டுவது, கழிவு நீர் தொட்டி அமைத்து அதிவேக மோட்டார் பொருத்தி கழிவு நீரை வெளியேற்றுவது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் தேவையான கட்டுமான பணிகளை உடனடியாக துவங்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.

இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி நகரமைப்பு அலுவலர் பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...