கூடலூர் நகராட்சி சார்பில்  திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் - திமுகவினர் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு

கோவை  வடக்கு மாவட்ட கூடலூர் நகர திமுக சார்பாக திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்றுவருவதாக கூட்டத்தில் புகழாரம் சூட்டப்பட்டது.



கோவை: கோவை சாமிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கூடலூர் நகராட்சி தலைவர் மற்றும் நகரசெயலாளர் அறிவரசு தலைமை வகித்தார்.

அப்போது வரிவசூல் செய்வதில் சுமார் 70 நாட்களில் கூடலூர் நகராட்சி தமிழகத்தில் 2வது இடத்தை பெற்றுள்ளதாகக் கூறினார்.



பொதுக்கூட்டத்தில் பேசிய மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், திமுக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு நல திட்டங்களையும் வளர்ச்சிப் பணிகளையும்,கல்லூரி மாணவ மாணவியர், மகளிர் மற்றும் முதியோர் ஆகியோருக்கு தனித்தனி திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது.

இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்று வருகிறது. எனவே வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்றார்.



அதைத் தொடர்ந்து, கோவை வடக்கு மாவட்டசெயலாளர் தொண்டாமுத்தூர்அ.ரவி, முன்னாள் எம்.எல்.ஏ.தர்மலிங்கம், மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர் பா.அருண்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.



இந்தப் பொதுக்கூட்டத்தில் கூடலூர் நகர் மன்ற உறுப்பினர்கள், திமுக கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...