காந்திபுரம் அருகே எரிந்த நிலையில் மீட்கப்பட்டவர் திருநங்கை..! - மருத்துவ பரிசோதனையில் தகவல்!

கோவை காந்திபுரம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரது சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் இறந்தவர் திருநங்கை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இறந்த திருநங்கை யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: காந்திபுரம் பகுதியில் எரிந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் திருநங்கை என்பது, மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் எரிந்த நிலையில் சுமார் 39 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருப்பதாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த நபரை உடலை மீட்டனர்.



இதனையடுத்து, இறந்தவர் யார் என்பது குறித்தும் கொலையா? என்ற கோணத்தில் விசாரணை துவங்கினர். இந்நிலையில் மருத்துவ பரிசோதனையில் இறந்தவர் திருநங்கை என்பது தெரியவந்துள்ளது.



இருப்பினும் அவர் யார்? எதற்கு வந்தார் என்பதும்,திருநங்கை சடலமாக மீட்கப்பட்ட இடம் இறுதியாக யார் பயன்பாட்டில் இருந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் சாலையோரங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...