போக்குவரத்து ஊழியர்களுக்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்குக..! - திருப்பூரில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளம் தீர்மானம்!

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான சம்பளம், ஓய்வு கால பணப்பலன், அகவிலைப்படி ஆகியவற்றிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து ஆண்டு தோறும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



திருப்பூர்: அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட பணப்பலன்களுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம்மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சம்மேளனத்தின் மாவட்ட பொது குழு கூட்டம் திருப்பூர் பல்லடம் சாலையில் தனியார் விடுதியில் நடைபெற்றது.



இந்த கூட்டத்திற்கு பின் போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் மாநில பொருளாளர் குணசேகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பென்ஷன், அகவிலைப்படி,ஓய்வு கால பணப்பலன்களை பெற தொழிற்சங்கங்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக எட்டாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

ஆனால் அதிலும் 8 ஆண்டு காலமாக தொழிலாளர்களுக்கான பணப்பலன்கள்இதுவரை வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு தேர்தல் கால வாக்குறுதிகள் அளித்ததை நிறைவேற்றி தர வேண்டும்,மின்வாரிய அரசு ஊழியர்களுக்கு போன்று அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் பென்ஷன், à®“ய்வு கால பணப்பலன், ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடு செய்து ஆண்டுதோறும் தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...