திருப்பூரில் விபத்து ஏற்படும் பகுதிகளை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயார்..! - அமைச்சர் எ.வ.வேலு தகவல்!

திருப்பூரில் விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளாக 236 இடங்கள் கண்டறியப்பட்டு 5 கோடி மதிப்பீட்டில் அவற்றை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: திருப்பூரில் விபத்துக்குரிய பகுதிகளை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் மாநில நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை, துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.



இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, கடந்த 2 ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தில் 45 கிலோ மீட்டர் சாலைகள் 622 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 25 கிலோமீட்டர் சாலைகள் மேம்படுத்த 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை - கரூர் நான்கு வழி சாலை பணிகள் தீவிர படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வெள்ளகோவில்,காங்கேயம், பல்லடம், திருப்பூர் என நான்கு பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கமத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

அன்னிய செலவாணியை ஈட்டி தரக்கூடிய திருப்பூர் உலகின் அடையாளமாக உள்ளது. கடந்த ஆய்வு கூட்டத்திற்கும் இந்த ஆய்வு கூட்டத்திற்கும் ஒப்பீடு செய்யும் போது சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது. இருப்பினும் மேலும் அதனை குறைப்பதற்கான ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாவட்டத்தின் அமைச்சரான சாமிநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை கடிதங்களை வழங்கி இருக்கின்றனர். அதனை தலைமை பொறியாளர்களுக்கு அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொண்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் சாமிநாதன் ,கயல்விழி செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மேயர்தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...