கோவையில் பொறியியல் பட்டதாரியை மிரட்டி செல்போன், பணம் பறிப்பு - இருவர் கைது!

கோவை மீனா எஸ்டேட் பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன்கள் மற்றும் ரூ.50,000 பணத்தை பறித்துச் சென்ற தூத்துக்குடியை சேர்ந்த விஸ்வா (19), ராமநாதபுரத்தை சேர்ந்த நீலகண்டன் (19) ஆகியோரை கைது செய்த போலீசார் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை அருகே நள்ளிரவில் வீடு புகுந்து செல்போன்கள் மற்றும் ரூ.50,000 பணத்தை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கப்பாபுரத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார் (21). பொறியியல் பட்டதாரியான இவர், தனது தோழியின் பிறந்தநாள் விழாவிற்காக கோவையில் உள்ள மீனா எஸ்டேட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி தோழிக்கு பிறந்தநாள் என்பதால் பிரவீன் குமார், அவரது அறையில் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும் மறுநாள் சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதற்காக பிரவீன் குமார் தனது தோழியின் அறையிலேயே தங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நள்ளிரவில், 4 பேர் கொண்ட கும்பல் இவர்களது அறைக்குள் அத்துமீறி நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.50,000 பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பிரவீன் குமார், பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற தூத்துக்குடியை சேர்ந்த விஸ்வா (19) மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீலகண்டன் (19) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள கஸ்தூரி ரங்கன், கருப்பு என்கிற தினேஷ் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...