கோவை அருகே சம்பளம் கேட்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கட்டிட தொழிலாளி மீது வழக்குப்பதிவு!

கோவை நெகமம் அருகே கட்டிட வேலை செய்யும் இடத்தில் பெண் ஒருவருக்கு உடன் பணியாற்றும் கட்டிட தொழிலாளி விஜயன் என்பவர் பாலியல் துன்புறுத்தல் அளிப்பதாகவும், வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



கோவை: கோவை அருகே சம்பளம் கேட்கச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டிய கட்டிட தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் நெகமம் அடுத்த வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்த 35 வயது இளம்பெண் ஒருவர் தான் வேலை செய்யும் இடத்தில் உடன் பணிபுரியும் கட்டிட தொழிலாளி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாக புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, நான் கட்டிட வேலை செய்து வருகிறேன். எனக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். நான் எனது ஊரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி விஜயன் (45) என்பவருடன் கட்டிட வேலைக்கு சென்று வருகிறேன்.

வேலை செய்யும் இடத்தில் விஜயன் தொடர்ந்து என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார். இது குறித்து நான் கட்டிட உரிமையாளரிடம் தெரிவித்ததை தொடர்ந்து அவர் விஜயனை கண்டித்து அனுப்பினார்.

இந்நிலையில், சம்பள பணம் வாங்குவதற்காக விஜயனின் வீட்டிற்கு சென்ற போது, அவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். அப்போது, நான் சத்தமிட்ட நிலையில், இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.

எனவே எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வரும் கட்டிட தொழிலாளி விஜயன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் வேலை செய்யும் இடத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...