கோவை அருகே இளம் பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் பிரசவம்!

கோவை அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்த நாகராஜ் மனைவி அனுசியா (21). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வலி அதிகரித்ததால், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிரவசம் பார்த்தனர். இதில் அழகான ஆண்குழந்தை பிறந்தது.


கோவை: கோவை அருகே கர்ப்பிணி பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் அழகான ஆண்குழந்தை பிறந்ததது.

கோவை அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி அனுசியா (21). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு இன்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் தமிழ் அழகன், டிரைவர் சக்திகுமார், அனுசியாவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது குழந்தையின் தலை வெளியே தெரிந்ததால், உடனடியாக அனுசியா ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்த்ததில், அனுசியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து ஆம்புலன்சு ஊழியர்கள் தாயையும், குழந்தையையும் சிகிச்சைக்காக துடியலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையையும், தாயையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். அவசரம் கருதி ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்க்க நடவடிக்கை மேற்கொண்ட மருத்துவ உதவியாளர் தமிழ் அழகன், டிரைவர் சத்திகுமார் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...